என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நல்லாசிரியர் விருது"
- 2022-23-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதான நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.
- நிகழ்ச்சி நடைபெறும் தினத்தன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் மாநில அரசு சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 342 பேர், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 38 பேர், ஆங்கிலோ இந்தியன், மாற்றுத்திறனாளிகள், சமூக படையில் (என்.சி.சி., என்.எஸ்.எஸ்.) தலா 2 பேர் என மொத்தம் 386 சிறந்த ஆசிரியர்கள் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவால் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 2022-23-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதான நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.
இவர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவர்களுக்கான விருதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்க இருக்கிறார். இந்த நிலையில் விருதுக்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள் தங்களுடன் இரண்டு பேரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்து வரலாம். நிகழ்ச்சி நடைபெறும் தினத்தன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதே போல் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஆசிரியர்கள் மீது குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஏதும் இல்லை என்பதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மீண்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதும் அதற்கான அத்தாட்சியுடன் பள்ளியில் இருந்து விடுவித்து இந்த விழாவில் பங்கேற்க அனுமதி கடிதம் வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
- ஆசிரியை மாலதியை தி.மு.க.வினர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
- ராஜா எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க.வினர் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தென்காசி:
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் அரசு பள்ளியின் ஆசிரியை மாலதியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் தி.மு.க.வினர் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து கோப்பை வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.
- 2023-24-ம் ஆண்டு இந்த விருதுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
- விருதுக்கு விண்ணப்பிக்கும் அனைத்துவகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
அவ்வாறு விருது பெறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும், ரூ.2 ஆயிரத்து 500 மதிப்பிலான வெள்ளிப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப் படியும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 38 மாவட்டங்களில் 342 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளில் மாவட்டத்துக்கு ஒரு ஆசிரியர் வீதம் 38 பேர், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தலா 2 பேர் என மொத்தம் 386 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
2023-24-ம் ஆண்டு இந்த விருதுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 6 பேர் கொண்ட மாவட்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையிலான குழு விண்ணப்பித்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு சென்று அவர்களுடைய செயல்பாடுகளை கண்டறிந்து மதிப்பீடு செய்யவேண்டும். விண்ணப்பித்த ஆசிரியர்கள் பணிப்பதிவேடுகள் மற்றும் பிற சான்றுகள் மாவட்ட அளவில் உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்பட வேண்டும்.
* மாவட்ட தேர்வு குழுவினர் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல், கருத்துருக்களை பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையிலான மாநில தேர்வு குழுவின் பரிசீலனைக்கு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதிக்குள் பரிந்துரைக்கவேண்டும். மாநில தேர்வு குழு மாவட்ட தேர்வு குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் இறுதி பட்டியலை தயாரிக்க வேண்டும்.
* விருதுக்கு விண்ணப்பிக்கும் அனைத்துவகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
* பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எந்தவித குற்றச்சாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், பொதுவாழ்வில் தூய்மையானவராகவும், பொது சேவைகளில் நாட்டம் கொண்டவராகவும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்தல், பள்ளி மாணவர் சேர்க்கை, தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், கல்வித் தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருக்க வேண்டும்.
* அரசியலில் பங்குபெற்றும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்களை கண்டிப்பாக பரிந்துரைக்க கூடாது. கல்வியினை வணிகரீதியாக கருதி செயல்படும் ஆசிரியர்களையும், இந்த விருதுக்கு தகுதியற்றவர்களாக கருதப்படவேண்டும். மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற எந்த ஆசிரியரையும் பரிந்துரை செய்தல் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
- அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய மற்றும் டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை விருதுக்கு பரிந்துரை செய்யக்கூடாது.
சென்னை:
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு, ரூ.10,000க்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுவர்.
அந்த வகையில், இந்த 2022-2023ம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை ஆகஸ்ட் 14ந் தேதிக்குள் பரிந்துரை செய்யலாம் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அறிவுறுத்தி உள்ளார்.
அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய மற்றும் டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை விருதுக்கு பரிந்துரை செய்யக்கூடாது.
ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், குற்ற நடவடிக்கைகளுக்கு உள்ளானவர்களையும் பரிந்துரை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- உமாதேவிக்கு நல்லாசிரியர் விருதும், ரூ.10,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
- உமாதேவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
முதுகுளத்தூர் :
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர், உமாதேவி. இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்.
கடந்த 5-ந் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி சென்னையில் நடந்த விழாவில், ஆசிரியை உமாதேவிக்கு விருதும், ரூ.10,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. அவருக்கு சக ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
மேலும் அவர் பள்ளிக்கு வந்தபோது, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் திரண்டு வரவேற்றனர். அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் வேல்முருகன், இந்திராகாந்தி, தலைமை ஆசிரியை ஜோசப் விக்டோரியா ராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவி செல்வராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பள்ளியில் கழிப்பறை உள்ளிட்ட கட்டிடங்கள் சேதம் அடைந்து காணப்படுவதால் தனக்கு அரசு வழங்கிய பரிசுத்தொகை ரூ.10 ஆயிரத்தையும், தனது தந்தை மோகன்தாஸ் சார்பாக ரூ.10 ஆயிரத்தையும் சேர்த்து ரூ.20 ஆயிரத்தை பள்ளியின் கட்டிடத்தை சீர்செய்ய தலைமை ஆசிரியையிடம் உமாதேவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- நல்லாசிரியர் விருது பெற்ற மதுரை ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடக்கிறது.
- இந்த விழா எட்வர்டு மன்றத்தில் நாளை நடக்கிறது.
மதுரை
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை பாராட்டி கவுரவிக்கும் வகையில் மதுரை மேலவெளி வீதியில் உள்ள விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் பாராட்டு விழா நடைபெறும்.
இந்த ஆண்டு கடந்த 5-ந்தேதி தமிழக அரசின் நல்லாசிரியர் விருது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
இவர்களை பாராட்டும் வகையில் மதுரை விக்டோரியா மன்றம் சார்பில் பாராட்டு விழா நாளை (8-ந்தேதி) மாலை 5 மணிக்கு தங்கரீகல் திரையரங்கில் நடைபெ றுகிறது.
விக்டோரியா எட்வர்டு மன்ற செயலாளர் டாக்டர் இஸ்மாயில் வரவேற்று பேசுகிறார். தலைவர் சுடலை தலைமை தாங்குகிறார்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா கலந்து கொண்டு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.
நிகழ்ச்சியை பட்டிமன்ற நடுவர் புலவர் சங்கரலிங்கம் தொகுத்து வழங்குகிறார்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 32 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
- பயிற்சி நிறுவன ஆசிரியர் உட்பட 10 பேருக்கு இவ்விருது வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 32 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வழங்கப்படும் 10 விருதுகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு மதிப்பீடு செய்து பட்டியலை கல்வி கமிஷனருக்கு அனுப்ப வேண்டும். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 20 பேரில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த நான்கு ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளிகளை சேர்ந்த நான்கு ஆசிரியர்கள், தனியார் பள்ளியை சேர்ந்த ஒரு ஆசிரியர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர் உட்பட 10 பேருக்கு இவ்விருது வழங்கப்படும்.
இதில், உயர்நிலைப்பள்ளி பிரிவில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், தளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் வெங்கடேஷ ரெட்டி, ஒசூர் ஒன்றியம் சமத்துவபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜாராம், கெலமங்கலம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திம்மப்பா ஆகிய நால்வருக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி பிரிவில் மத்தூர் ஒன்றியம் முத்தாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்திரபாண்டியன், தளி ஒன்றியம் பின்னமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசா, மத்தூர் ஒன்றியம் குண்டேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், ஊத்தங்கரை ஒன்றியம் நாப்பிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி ஆகிய நால்வருக்கும் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற வுள்ள விழாவில் அனை வருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
- நடப்பாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் 46 பேர் கொண்ட பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்பட சில மாநிலங்களில் தலா ஒரு ஆசிரியரும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
புதுடெல்லி:
மத்திய அரசால் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் தகுதியான நபரை மத்திய அரசு தேர்வு செய்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் 46 பேர் கொண்ட பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டு உள்ளது. அதன்படி, இமாசல பிரதேசம், பஞ்சாப், தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தலா 3 ஆசிரியர்களுக்கும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், கர்நாடகா, சிக்கிம் மாநிலங்களில் தலா 2 ஆசிரியர்களுக்கும் விருதுகள் கிடைத்துள்ளன.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்பட சில மாநிலங்களில் தலா ஒரு ஆசிரியரும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இதில் தமிழகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கான விருது வழங்கும் விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
- தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 386 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சென்னை :
பள்ளி கல்வித்துறையில் 38 வருவாய் மாவட்டங்களாக நிர்வாகம் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 386 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்களை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.
இதற்காக மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழுவும், மாநில அளவில் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கற்பித்தல் பணியில்...
* தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் மாவட்ட தேர்வு குழுவின் முன் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பீடு செய்ய வேண்டும். மாவட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை, மாநில தேர்வு குழுவின் பரிசீலனைக்கு வருகிற 14-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அந்த பட்டியலின் அடிப்படையில் மாநில தேர்வு குழு இறுதி பட்டியலை தயாரிக்க வேண்டும்.
* அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது.
* பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எந்தவித குற்றசாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், பொதுவாழ்வில் தூய்மையானவராகவும், பொதுசேவைகளில் நாட்டம் கொண்டவராகவும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்தல், பள்ளி மாணவர் சேர்க்கை, தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், கல்வித்தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்.
* அரசியலில் பங்குபெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாக பரிந்துரைக்கக்கூடாது. கல்வியினை வணிகரீதியாக கருதி செயல்படும் (டியூசன் எடுப்பவர்கள்) ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இந்த விருதுக்கு தகுதியற்றவர்களாக கருதப்படவேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பள்ளி தாளாளர்கள் கூட்டம் பல்லடம் ப்ளூபேர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் குப்புராஜ் வரவேற்றார்.
மாநில நிறுவனத் தலைவர் பி.டி.அரசக்குமார் தலைமை வகித்து பேசியதாவது:-
பள்ளிக்கூடம் நடத்துவது என்பது தனிக்கலை ஆகும். பள்ளிக்கூடத்தை யார் வேண்டுமானாலும் எளிதாக ஒரு தொழில் நிறுவனத்தை போல் நடத்திட முடியாது. தங்களது குழந்தைகளை போல் பள்ளி மாணவ, மாணவிகளையும், தங்களது குடும்ப உறுப்பினர்களை போல் ஆசிரியர்களையும் நினைத்து பள்ளியை ஓர் குடும்பமாக பாவித்தால் தான் அதில் வெற்றி பெற முடியும். அதிக ஊதியம் பெறும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுவது போல் குறைந்த ஊதியத்தில் நிறைவான சேவையுடன் பணியாற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.
தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அடிக்கடி பள்ளிகள் மற்றும் ஊர் இடம் பெயர்வர். எனவே பி.எப், மற்றும் இ.எஸ்.சி. காப்பீடு செய்வது குறித்து அரசு கட்டாயப்படுத்தக்கூடாது. தனியார் பள்ளிகள் ஆண்டு தோறும் அங்கீகாரம் பெறும் முறையை மாற்றி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக மாற்றியை மத்திட வேண்டும்.
சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கு என்று தனியாக கல்விக் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். தற்போது இயங்கி வரும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்திலேயே தனி கட்டிடத்தில் சி.பி.எஸ்.சி. பள்ளி நடத்த முன்னுரிமை அளித்து அரசு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார்
இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் லிங்கன், ப்ளூபேர்ட்பள்ளி தாளாளர் ராமசாமி, விவேகானந்தா பள்ளி தாளாளர் சுகந்தி முத்துக்குமார் உள்பட 30 பள்ளி தாளாளர்கள் கலந்துகொண்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாதி பாளையம் மற்றும் கொளப்பலூர் ஆகிய ஊராட்சிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.54 கோடி மதிப்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது.
இந்த கட்டிட பணியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜையுடன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நம்பியூர், எலத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசு பள்ளியிலும் படித்த மாணவர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு உதவவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் அடிப்படையில் மனிதநேயம் மிக்கவர்கள் அன்புள்ளம் கொண்டவர்களும் முன் வந்துள்ளனர்.
அவர்களுடன் அரசும் இணைந்து தமிழகத்தில் உள்ள 57 ஆயிரம் அரசு பள்ளிகளில் தனியாரை மிஞ்சுகின்ற அளவிற்கு கடடமைப்பு வசதிகளுடன், உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய அமைச்சருடன் தொடர்பு கொண்டுள்ளேன். மீண்டும் பழைய முறையை பின்பற்ற வேண்டும். 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்துரவிச் சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம் சிறுவலூர் மனோகரன், பிரினியோ கணேஷ், கந்த வேல் முருகன், காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். #TNMinister #Sengottaiyan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்